திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றியவர் சுப்பிரமணி (52). இவரது மனைவி பிரமிளா. இவர் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் இன்று (06-07-2025) நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.