திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும், விரைந்து வழங்ககோரியும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் நுழைவாயிலில் இன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து பல்கலைக்கழக உறுப்பினர் ராஜேஷ் கண்ணனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
Comments are closed.