திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த வாலிபரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.கும்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கோர்ட்டு வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய, விடிய விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments are closed.