திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.06.2025) காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக லால்குடி நகர் பகுதியில் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவாளூர் பின்வாசல், தென்கால், மணக்கால், கொப்பாலி, நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிக்குடி, கொல்லக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், சங்கமாபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன் நகர், காட்டூர், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளூர், பெருவளநல்லூர், இடுக்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல தொட்டியம் துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர், தும்பலம், நாடார் காலனி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி செயற்பொறியாளர் ப.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Comments are closed.