திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணியில் புதிதாக இணைந்துள்ள இளைஞர்கள் ஒன்றிய, மாநகர, பகுதி, பேரூர் பகுதிகளில் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இவர்களுக்கான அறிமுகக் கூட்டம் மற்றும் பயிற்சி பாசறைக் கூட்டம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று (ஜூன் 4) நடைபெற்றது. அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கிய அமைச்சர், இளைஞர் அணி நிர்வாகிகள் குறிப்பு நோட்டுகளை (மினிட்புத்தகம்) வழங்கினார். இதில், கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தமிழன் பிரசன்னா, செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இளமாறன், சமூக வலைதள பயிற்சியாளர் மாவட்ட அமைப்பாளர் அ.வெங்கடேஸ் குமார், மாநகர அமைப்பாளர் மு.ர.முத்துதீபக் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.