Rock Fort Times
Online News

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்…!

மின் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன
உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9-ந் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ( ஜூன் 2) திருச்சி மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி பெடரேஷன் சங்க மாவட்ட செயலாளர் சிவ செல்வம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க ஆலயமணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நடராஜன், வட்ட செயலாளர் பழனியாண்டி, வட்ட துணைத்தலைவர் எஸ்.கே.செல்வராஜ் ஆகியோர் பேசினர். முடிவில் எம்பிளாயிஸ் பெடரேஷன் சங்க செந்தில் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்