தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடிய போகிறது. 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அதிமுக, பாரதிய ஜனதா மற்றும் முன்னணி கட்சிகள் இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இது ஒரு புறம் இருக்க தேர்தல் கமிஷனும் தங்களது பணிகளை தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர், உதவி கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்னர். 234 தொகுதிகளுக்குமான அதிகாரிகள் யார், அவர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார். தற்போது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.

Comments are closed.