தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (மே 29 ) திருச்சி வருகை தரவுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை வியாழக்கிழமை திருச்சி வரும் அவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில்களில்
சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து இரவு தங்கி ஓய்வெடுக்கும் அவர், மறுநாள் வெள்ளிக்கிழமை (30 ம் தேதி) காலை, திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.