Rock Fort Times
Online News

ரூ.1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் பொன்னான வாய்ப்பு-* மே 29-ம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டுகோள்!

தமிழ்நாடு அரசு சார்பில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்த சிலருக்கு இன்னும் உரிமை தொகை கிடைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 29-ந்தேதி முதல் தகுதியான விடுபட்ட பெண்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்