மின்மயமாக்கல், பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பேரளம் – காரைக்கால் இடையே நடைபெறும் மின்மயமாக்கல் பணி ஆய்வால், மயிலாடுதுறை திருவாரூர் – மயிலாடுதுறை மெமு ரயில்களானது (66067, 66024) மே 23 ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மன்னார்குடி- மயிலாடுதுறை- மன்னார்குடி பயணிகள் ரயில்களானது (56002, 56001) 23 ம் தேதி மயிலாடுதுறை – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மன்னார்குடி-திருவாரூர் இடையே மட்டுமே இயங்கும். போதானூரில் பொறியியல் பணிகளால், பாலக்காடு திருச்சி ரயிலானது (16844) திருச்சி – குளித்தலை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு – குளித்தலை வரை மட்டுமே இயங்கும். பாலக்காடு – திருச்சி ரயிலானது (16843) வரும் பாலக்காடு -பேட்டைவாய்த்தலை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி -பேட்டைவாய்த்தலை வரை மட்டுமே இயங்கும். ராமேசுவரம் – செகந்திராபாத் சிறப்பு ரயிலானது 23ம் தேதி ராமேசுவரம்- பேரளம் இடையே 120 நிமிடங்கள் நின்று தாமதமாகப் புறப்படும். கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666)
24- ம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி-சார்லப்பள்ளி கோடைகால சிறப்பு ரயிலானது (07229) 23ம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.