தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது, தமிழக அமைச்சர்கள் சிலரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை ‘ரெய்டு’, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னர் இடையே மோதல் போக்கு, மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்க மறுப்பு போன்ற காரணங்களால் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஒத்து போகாத நிலை இருந்து வருகிறது. இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 23ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும், 24ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றபோது மத்திய அரசு தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லையென கூறி தமிழக முதலமைச்சர் இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தார். இந்த சூழ்நிலையில் வருகிற 24ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.