துறையூர் அருகே கோவிலுக்கு சென்ற போது விபத்து: சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம்…!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட நெசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் கீழக்கரையிலுள்ள சிவன் கோவில் திருவிழாவிற்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். வல்லம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த நெசக்குளத்தைச் சேர்ந்த கௌசல்யா, கார்த்திக், அஜித், லட்சுமி, கருப்புசாமி, மாணிக்கம், இந்திராணி, ராஜேஸ்வரி, வெள்ளையம்மாள் உள்ளிட்ட 13 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Comments are closed.