திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் பேரூராட்சி திமுக வார்டு உறுப்பினர்கள் 9 பேர் திடீர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவராக சௌந்தரராஜன் (திமுக) உள்ளார். துணைத் தலைவராக செல்வி கோவிந்தசாமி பதவி வகிக்கிறார். மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளன. இதில், பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் சௌந்தரராஜன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தங்கள் வார்டு பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக அவரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(15-05-2025) வார்டு உறுப்பினர்கள் சாந்தி, கீதா, பழனியப்பன், ஜவகர், உமா மகேஸ்வரி, சத்தியபாரதி, கோபு, தியாகராஜன் உள்ளிட்ட 9 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணனிடம் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் துவாரநாத்சிங் வார்டு உறுப்பினர்களின் ராஜினாமா கடிதம் குறித்து விசாரணை மேற்கொண்டு, வருகிறார். திமுக வார்டு உறுப்பினர்கள் 9 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.