Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கும் மின்கம்பம்…!

திருச்சி மாவட்டம், கிழக்கு தாலுகா, அரியமங்கலம், அம்மாகுளம் முல்லைநகர் செல்லும் பாதையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் நிற்கிறது. அந்த மின்கம்பம் கீழே சாய்ந்து விடாமல் இருப்பதற்காக மூங்கிலால் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே சரிந்து விழுந்து விபரீத சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்