விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ… * ஓடோடி வந்து முதல் உதவி சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்…!(வீடியோ இணைப்பு)
புதுக்கோட்டை மாவட்டம், மழையூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று(05-05-2025) நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராசு உள்ளிட்டோர் சென்று கொண்டிருந்தனர். கெண்டையன்பட்டி அருகே இரு கார்களும் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அந்தக் கார் அப்பளம் போல நொறுங்கியது. அதில் பயணம் செய்த ராசு உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்ததும் முன்னால் சென்று கொண்டிருந்த டாக்டர் விஜயபாஸ்கர் தனது காரை நிறுத்த சொல்லி ஓடோடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் மருத்துவம் படித்த டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.