திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல்- வாக்காளர் பட்டியல் வெளியீடு…!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47 மாமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்நாதன்,நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 47- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த காலி பதவியிடத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மெ.த.சாலைதவவளன் மற்றும் த.சசிகலா, உதவி ஆணையர்(பணிகள்) ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு இன்று (05.05.2025) வெளியிட்டார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 5738, பெண் வாக்காளர்கள் 6133, மூன்றாம் பாலினத்தவர் 2 என மொத்தம் 11,873 வாக்காளர்கள் பட்டியிலில் அடங்கியுள்ளனர். பொதுமக்கள் பார்வைக்காக மாநகராட்சி மைய அலுவலகம், வார்டுக்குழு அலுவலகம் -2 மற்றும் வார்டுக்குழு அலுவலகம் -4ல் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதனை அந்த வார்டு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.