Rock Fort Times
Online News

மே 8, 9 தேதிகளில் திருச்சிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பு… * அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று (மே 4) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, பண்ணப்பட்டி கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜன் எம்.எல்.ஏ. மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் க.வைரமணி, எம்எல்ஏக்கள் சௌந்தர பாண்டியன், கதிரவன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பரணிகுமார், பெரியசாமி, கே.என்.சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் மற்றும் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர். கூட்டத்தில், திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்திற்கு 30 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்த முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார். நாம் கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்றோம்.

அதே போன்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வர பாடுபட வேண்டும். திருச்சிக்கு வருகிற 8, 9 தேதிகளில் வருகை தரும் முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திருச்சிக்கு வருகிற 8, 9 தேதிகளில் வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு நாம் அளிக்கும் வரவேற்பு வருகின்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில், * திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 8 மற்றும் 9 தேதிகளில் வருகை தரும் தமிழக முதல்வர், தி.மு.கழக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பதுடன் அவர் கலந்து கொள்ளும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்திலும் பெருந்திரளாக கழகத்தினர் கலந்து கொள்வது. திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைந்திட அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கியும், அப்பேருந்து நிலையத்திற்கு டாக்டர்.கலைஞரின் பெயரை சூட்டியும் நேரிடையாக வருகை தந்து பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் முதலமைச்சருக்கும், இத்திட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இக்கூட்டம் தனது நன்றியை தெரிவித்து கொள்வது.

 

* தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பொறுப்பிற்கு தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல் நியமனங்களை தாமதப்படுத்திய ஆளுநரின் செயலை கண்டித்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டி மாநில சுய ஆட்சிக்கு வித்திட்ட திராவிட மாடல் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இக்கூட்டம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

* திருச்சி மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைந்திட அனைத்து வழிகளிலும்,அயராது பாடுபட்டு வரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருக்கும், உறுதுணையாக இருந்த திருச்சி மாநகராட்சி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்வ து என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், துரைராஜ், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், நிர்வாகிகள் ஆனந்தன், கருணாநிதி, ராஜேந்திரன், விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜ், கவுன்சிலர் காஜாமலை விஜய், ராம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் , புத்தூர் தர்மராஜ், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத், வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், பி.ஆர்.பி .பாலசுப்ரமணியன், வாமடம் சுரேஷ், தனசேகர், கவுன்சிலர்கள் கவிதா செல்வம், ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் அயூப்கான், சர்ச்சில், ரஜினிகிங், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் லீலா வேலு, மூக்கன், செங்குட்டுவன், மாநகர நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்.செல்லையா, பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், பாபு, ஏ.எம்.ஜி.விஜயகுமார், நீலமேகம், சிவக்குமார், ராஜ் முகமது, மோகன், மணிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.கே.கே. கார்த்திக், வேங்கூர் தனசேகர், கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, பொற்கொடி, எல்.ஐ.சி சங்கர், சீதாலட்சுமி முருகானந்தம் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் மயில்வாகனன் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்