Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !- வரையறைகள் வெளியிட்டார் கலெக்டர்…

திருச்சி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 427 ஏரி குளங்களில் இருந்து வண்டல் மண் களிமண் உள்ளிட்டவற்றை இலவசமாக வெட்டி எடுத்து செல்ல அரசின் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., ” திருச்சி மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர், ஒரு ஹெக்டேருக்கு 185 கன மீட்டர் மண்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல 30 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம் அதே வருவாய் வட்டத்திற்குள் இருக்க வேண்டும். வண்டல் மண் எடுக்க விரும்புவோர் சிட்டா மற்றும் அடங்கல் நகலுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களைப் பெற அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்