பூலோக வைகுண்டம் என புகழப்படுவதும், 108 தலங்கள் திவ்யதேசங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள் பெருமாள் மீது இருந்த பக்தியால் அவருக்கு பூமாலை கொடுக்கும் தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணம் முடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் என்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் – ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இடையே சம்பந்தமும், உறவும்,மங்களப் பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வருகிறது.இந்நிலையில் நாளை சித்திரை தேரோட்டம் நடக்க உள்ளதை முன்னிட்டு, இன்று காலை 06.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ரங்க விலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பிறகு அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள், அறங்காவலர்கள் நளாயினி உமாராணி, தலத்தார்கள் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோரிடம் வழங்கினர். நாளை நடைபெறும் சித்திரை தேர் திருவிழாவின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து ரங்கநாதர் தேரோட்டம் கண்ட அருள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.