Rock Fort Times
Online News

திருச்சி- காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து- தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கம்…!

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி- காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், திருச்சி- காரைக்கால் டெமு ரயிலானது (76820) வருகிற 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் காரைக்கால் – தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி – தஞ்சாவூர் இடையே மட்டும் இயங்கும். இதேபோல காரைக்கால் -திருச்சி டெமு ரயிலானது (76819) வருகிற 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் காரைக்கால் -தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்