திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த கே.சண்முகவேல் காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரான வி. நிர்மலா, சைபர் க்ரைம் பிரிவு பொறுப்பாளராகவும், முதன்மை நீதிமன்றக் காவல் ஆய்வாளரான ஆர். ரத்தினவள்ளி, கோட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள், பெண் தலைமைக் காவலர்கள், பெண் காவலர்கள் என 281 பேர் காவல் நிலையம் மற்றும் வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாறுதல் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மாநகரக் காவல் ஆணையர் ந. காமினி தெரிவித்தார்.
Comments are closed.