திருச்சி கொட்டப்பட்டு அருகே அண்ணா அறிவியல் கோளரங்கம் உள்ளது. இங்கு,பள்ளி மாணவர்கள், குழந்தைகளிடையே வான் அறிவியல் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் வான்நோக்குதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி,நாளை (ஏப்.12) இம்மாதத்திற்கான வான் நோக்குதல் நிகழ்வு நடைபெறும்.இந்த நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கோள்களை தொலைநோக்கிமூலம் பார்க்கச் செய்து அவை குறித்த விவரங்களும் விளக்கிக் கூறப்படும். மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும் என அறிவியல் மைய திட்ட இயக்குநர் ஆர். அகிலன் தெரிவித்துள்ளார்

Comments are closed.