Rock Fort Times
Online News

திருச்சியில் சாலையில் நின்று குத்தாட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்…- ஒதுங்கி நிற்க சொல்லிய அரசு பேருந்து கண்டக்டருக்கு சரமாரி அடி…!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று(10-04-2025) வெளியானது. திருச்சியில் 8 திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரின் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். அப்போது சில ரசிகர்கள் மேளதாளம் முழங்க சாலையில் நின்று குத்தாட்டம் போட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று செல்ல வழி இல்லாமல் நின்றது. அந்த பேருந்தின் ஓட்டுனர் ராஜா வழிவிடுமாறு கூறியுள்ளார். மேலும் நடத்துநர் கிருஷ்ணாவும் பேருந்தை விட்டு இறங்கி இளைஞர்களிடம் வழிவிடுமாறு கூறியுள்ளார். உற்சாக மிகுதியில் இருந்த ரசிகர்கள் ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், யுவன் சங்கர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தப்பியோடிய யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்