திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று(10-04-2025) சார்ஜா செல்ல தயார் நிலையில் இருந்தது. அதில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் சவுதி ரியால்கள் அதிக அளவில் இருந்தன. அதனைக் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூ.19 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்தப் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் செல்போன் சார்ஜரில் மறைத்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.