திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2 இடங்களில் கோடைகால நீர்மோர் பந்தல் அமைப்பு… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர பகுதிகளில் இன்று(05-04-2025) 2 இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. மார்க்கெட் மயிலம் சந்தை மற்றும் பாலக்கரை ரவுண்டானா அருகில் பகுதி திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்கள் வழங்கினார். நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பகுதி கழகச் செயலாளர்கள் டிபிஎஸ்எஸ் ராஜ்முஹமத், ஆர்ஜி பாபு மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Comments are closed.