வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் ரஹீம், தளபதி அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் இன்ஜினியர் முகமது சித்திக் வரவேற்றார். மாநில பேச்சாளர் முபாரக் அலி கண்டன உரை ஆற்றினார். மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு), மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சிராஜ் ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் ஜமால் முஹம்மது தொகுத்து வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.டி.யு. மாநில செயலாளர் முஹம்மது ரபீக், விம் மாநில செயலாளர் மெஹராஜ் பானு, மாவட்ட செயலாளர் சதாம் உசேன், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜீத், சட்டமன்ற தொகுதி தலைவர்கள் சபியுல்லா,ஷேக் முகம்மது ரியாஸ், கல்வியாளர் அணி அப்துல் அஜீஸ், வர்த்தகர் அணி ஷேக் அலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் காஜா மொய்னுதீன், தவுலத் நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.