திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பிரான்சியா காலனி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான குட்கா – பான் மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரை போலீசார் விசாரித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.4,368 மதிப்புள்ள 2 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.