மும்மொழி கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டிவிட்டு ஓடு… ஓடு… என்கின்றனர்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கை பல மாநிலங்களில் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக மும்மொழி கொள்கையை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் கல்வி நிதி இன்னும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பிய போது, தமிழக கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு பிறகு யாரோ ஒரு சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எதிர்ப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கேட்டபோது, அனைத்திலும் முதல் பரிசை பெறுவதால் தமிழ்நாட்டை ஓட விட மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான், மும்மொழி கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டிவிட்டு ஓடு…ஓடு…எனக் கூறுகின்றனர். பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக குழு அமைத்த பிறகே முடிவு எடுக்கப்படும் என கடிதத்தில் தெளிவாக கூறினோம். தமிழ்நாட்டை அனைத்து நிலைகளிலும் முன்னேற்ற பாதையில் நமது முதல்வர் கொண்டு செல்கிறார். நாட்டின் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார். அவர் சூப்பர் முதல்வர். மத்திய அரசு நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Comments are closed.