திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்திப் வெளியிட்ட செய்தி குறிப்பில், குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு அஞ்சலகம் மூலமாக பார்சல் அனுப்பும் திட்டத்தை அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது. இதற்கான பிரத்யேக கவுன்டர்கள் ஸ்ரீரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய தலைமை அஞ்சலகத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ட்களை
மட்டும் அஞ்சலகத்துக்கு எடுத்து வந்தால் போதுமானது. களின் முன்னிலையில், அஞ்சல் துறையின சின்னம் பொறித்த அட்டைப்பெட்டியில், பிரத்தியேக இயந்திரம் மூலம் பேக் செய்து சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பப்படும். மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு தனித்துவமான சேவையும் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.