Rock Fort Times
Online News

திமுக பிரமுகர் பெருவை எஸ்.முருகவேல் இல்ல புதுமனை புகுவிழா!- அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரும், இ2ஜி இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருமான பெருவை. இன்ஜினியர் எஸ். முருகவேல் இல்ல புதுமனை புகுவிழா லால்குடி அருகே உள்ள ஆங்கரை, சரோஜா நகரில் இன்று ( மார்ச் – 9 ) நடைபெற்றது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய இல்லத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் லால்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ அ.சௌந்தரபாண்டியன், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி என்.தியாகராஜன், துறையூர் எம்எல்ஏ எஸ்.ஸ்டாலின் குமார், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெக்ஷ்மி நாராயணன், முன்னாள் லால்குடி ஒன்றிய சேர்மன் டி.ரவிச்சந்திரன், முன்னாள் அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ், முன்னாள் புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன் கோல்டன் ரஸியா ராஜேந்திரன், லால்குடி ஒன்றிய திமுக செயலாளர்கள் நத்தம் பெரியய்யா, சக்திவேல், சண்முகநாதன், துணைச்செயலாளர் குழந்தைவேலு, அல்லூர் மு.கருணாநிதி, வீர முத்தரையர் முன்னேற்றக்கழகத் தலைவர் கே.கே.செல்வக்குமார், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கலை, லால்குடி தொகுதி அதிமுக பிரமுகர் காத்தான், பஜார் மைதீன், பரமக்குடி ஜெகன், லால்குடி சாய் வித்யாலயா பள்ளி தாளாளர் சிவக்குமார், முன்னாள் சிறுமருதூர் பஞ்சாயத்து தலைவர் கடல்மணி, முரளி, சிற்பி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் , தொழிலதிபர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல், வடை, கேசரி உள்ளிட்ட மெனு வகைகளுடன் காலை உணவும், டிரை ஜாமுன், காளான் பிரியாணி, தயிர் பச்சடி, சேனை சாப்ஸ், உருளை பட்டாணி பால்கனி, வெண்டை சுண்டல் புளிமண்டி, புடலங்காய் 65, மா- இஞ்சி ஊறுகாய், வத்தக்குழம்பு, ரசம், பாசிபருப்பு பாயாசம், அப்பளம், கடலை பட்டணம் பக்கோடா, பீடா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட அறுசுவை சைவ உணவுகளுடன் மதிய விருந்தும் பரிமாறப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இன்ஜினியர் எஸ்.முருகவேல் குடும்பத்தினர், இ2ஜி இன்ஜினியரிங் சர்வீசஸ் நிறுவன நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

ADVERTISEMENT…👇

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்