Rock Fort Times
Online News

பேஸ்புக்கில் பழகி சீட்டிங் செய்த அழகி..!- பணம்,நகையை பறிகொடுத்து அழுது புழம்பும் இளைஞர்!

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தங்களின் முகவரிகளாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி பேர்வழிகள், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக சபல புத்தி கொண்ட இளைஞர்களை ” டார்கெட் ” செய்யும் சீட்டிங் கும்பல், அவர்களை மோசடி வலையில் வீழ்த்தி பணம், நகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அபேஸ் செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதே போன்றதொரு சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.பேஸ்புக் மூலம் அறிமுகமான மாடல் அழகிய இடம் பணம் நகை உள்ளிட்டவற்றை பறிகொடுத்து தற்போது அந்த இளைஞர் அழுது புலம்பி கொண்டிருக்கிறார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்ததாவது., விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் 29 வயதான வரதராஜ பெருமாள். இவரிடம் இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்த அப்பெண், வரதராஜ பெருமாளிடம் பண உதவி கேட்டுள்ளார். இதை நம்பி வரதராஜ பெருமாளும் 5 ஆயிரம் அனுப்பியுள்ளார்.  பின்பு அந்த இளம் பெண்ணும், இளைஞரும் அறைகுறை ஆடைகளுடன் வீடியோ கால் பேசி வந்துள்ளனர். அப்போது வரதராஜ பெருமாள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் போது அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துள்ளார். பின்னர் இதை அவரது மனைவிக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டி அப்பெண் பலமுறை பணம் பறித்தாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நகையையும் கொரியர் மூலம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் மனம் நொந்து போன இளைஞர், இது குறித்து விருதுநகர் எஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினோம். விசாரணையில் வரதராஜ பெருமாளிடமிருந்து மிரட்டி பணம், நகையை பறித்த இளம் பெண் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழுவரசநல்லூரை சேர்ந்தவர் என்பதும், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகள் மூலம் பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கும்பகோணத்தில் பதுங்கி இருந்த அப்பெண்ணை கைது செய்துள்ளோம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்