முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி!
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினி 72வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் 72 போட்டியாளர்கள் பங்கேற்ற மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. திருச்சி எஸ்.ஐ. டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு போராடும்,தமிழ்நாடு வெல்லும் என்றும், இந்தியை எதிர்ப்போம், தமிழ் எங்கள் மூச்சு உள்ளிட்ட வாசகங்களுடன் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் குணசேகரன் ஆகியோர் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரம்யா பேகம் வரவேற்றார். முடிவில் மாநகர விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் கோ.வி. நாகராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட வட்ட, பகுதி, மாநகர, மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT…👇

Comments are closed.