Rock Fort Times
Online News

ரேசன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்!- திருச்சி மாவட்டத்தில் நாளை (மார்ச் -8) நடக்கிறது!

திருச்சி மாவட்டத்தில் ரேசன் கார்டுகளில் பெயர் மாற்றம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய நாளை ( மார்ச் 8ம்தேதி ) சனிக்கிழமை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாக்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் மேலும் கூறியதாவது., திருச்சி கிழக்கு வட்டத்தில் கல்லுக்குழி, திருச்சி மேற்கு வட்டத்தில் கிராப்பட்டி காலனி-1, திருவெறும்பூர் வட்டத்தில் அய்யம்பட்டி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் பனையபுரம், மணப்பாறை வட்டத்தில் மாதம்பட்டி, முசிறி வட்டத்தில் சந்தபாளையம், துறையூர் வட்டத்தில் கிருஷ்ணாபுரம், தொட்டியம் வட்டத்தில் திருநாராயணபுரம், மருங்காபுரி வட்டத்தில் கண்ணூத்து, லால்குடி வட்டத்தில் பெருவளப்பூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் இருங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கலாம் என கூறியுள்ளார்.

                 ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்