Rock Fort Times
Online News

இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுரங்கள்…-திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன் வழங்கினார்..!

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை வழங்குவோம் என்று தமிழக அரசை கட்டாயப்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட கே.கே.நகர்,பாலக்கரை, எடத்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாவட்ட துணை செயலாளர் மூக்கன், கலைஞர் நகர் பகுதி கழக செயலாளர் மணிவேல், பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜ் முகமது, மாநகரப் அவைத் தலைவர் நூர்கான், பொருளாளர் தமிழ்ச்செல்வன்,
மாநகர துணை செயலாளர் பொன் செல்லையா ,சந்திரமோகன்,சரோஜினி வெங்கட் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்