தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 425 மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ இன் பார்மசி, பேச்சலர் ஆஃப் பார்மசி அல்லது டி.ஃபார்ம் உள்ளிட்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தமிழ்நாடு பார்மசி கழகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மருந்தாளுனர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 35,400 முதல் ரூ.1,30,400 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் மருந்தாளுனர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதி தேர்வு, மருந்தாளுனருக்கான கணினி அடிப்படையிலான தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட மூன்று படிநிலைகளில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ₹500 விண்ணப்ப கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இப்பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி வருகிற மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் தகவல்களை பெற விரும்பினால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
Comments are closed.