திருச்சி மாநகராட்சி 19-வது வார்டு பகுதியில் பத்து இடங்களில் சிசிடிவி கேமரா- சொந்த செலவில் அமைத்துக் கொடுத்த திமுக கவுன்சிலர் சாதிக்பாஷா…!
திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர 19 (அ) வார்டு திமுகழக செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி பொது சுகாதாரகுழு உறுப்பினராகவும், திருச்சி மாமன்ற 19 -வது வார்டு கவுன்சிலராகவும் பதவி வகித்து வருபவர் எஸ்.கே.சாதிக்பாஷா. இவர், கவுன்சிலராக தான் வெற்றி பெற்றதும் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, திமுக கவுன்சிலராக வெற்றி பெற்றதும் தனது வாடுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். தற்போது தேர்தலில் கொடுத்த வாக்குறுதி படி முதல் கட்டமாக தனது வார்டுக்கு உட்பட்ட சவுந்தரபாண்டியன் பிள்ளை தெரு, சுண்ணாம்புக்கார தெரு, சுண்ணாம்பு கார தெரு உபசந்து 1, 2, தெற்கு சுண்ணாம்புக்கார தெரு மற்றும் தெற்கு சுண்ணாம்புக்கார தெரு உபசந்து 1, 2 ஆகிய 10 இடங்களில் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தார். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்ததோடு கவுன்சிலர் சாதிக்பாட்ஷாவின் இந்த சேவையினை வெகுவாக பாராட்டினார். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர திமுகழக செயலாளர் மு.மதிவாணன், பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு, மற்றும் ஜி.வேலுமணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Comments are closed.