கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி, அரியமங்கலம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்…!
திருச்சி, மாநகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 35-வது வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை, வடக்கு உக்கடை சர்வீஸ் சாலை சாலையையும், அதனை இணைக்கும் சுரங்கப் பாதையையும் சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று(22-02-2025) திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், சாகுல் ஹமீது, முகமது பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், சீனிவாசன், பாலக்கரை பகுதி செயலாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பாலக்கரை பகுதிக்குழு உறுப்பினர் கனல் கண்ணன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கை குறித்து மேல் அதிகாரியிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments are closed.