அதிமுக ஆட்சியின் சாதனை பட்டியல்- வீடுகள்தோறும் துண்டு பிரசுரம் வழங்கி திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திண்ணைப் பிரச்சாரம்…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் சில கட்சிகள் முன்கூட்டியே தேர்தல் ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக ஒரு படி மேலே போய் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. அந்தவகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
திருவெறும்பூர் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த பிரச்சாரத்தை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தொடங்கி வைத்ததோடு ஒவ்வொரு கடையாகவும், வீடுகள்தோறும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் எஸ்.ராஜ மணிகண்டன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சுபத்ராதேவி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி. கார்த்திக், எஸ்.எஸ்.ராவணன், நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, அணி நிர்வாகிகள் சுரேஷ்குமார், கார்த்திக், எம்.டி.ராஜா, டி.காசிராமன் மற்றும் வட்ட செயலாளர்கள் கணேசன், அன்புதுரை, அபிமன்யூ, ரோஷன், முத்துக்குமார், ஆபிரகாம், அம்மன் மணி, யோகானந்த், வெங்கடேஷ், சங்கர்,
மணி, கோபு ஜெ.பேரவை நிர்வாகிகள் திரளான கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.
Comments are closed.