முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!
முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான CEETA மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக பொதுநுழைவுத் தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்ட அறிவிப்பில், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான CEETA மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு (டான்செட்2025 ) https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. எம்பிஏ, எம்சிஏ, படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1000 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 22 தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.