Rock Fort Times
Online News

தமிழகத்தில் 6 நாட்கள் வெயில் அதிகரிக்கக்கூடும்- வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்…!

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இம்மாதம் (பிப்ரவரி) முதலே வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது காலை நேரங்களில் பனி பெய்வதும், மதியம் வெயில் கொளுத்துவதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று(21-02-2025) முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ், 23, 24-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்