மணப்பாறையில் நடுரோட்டில் தந்தை-மகன் ரகளை: தடுக்க தவறிய 3 காவலர்கள் பணியிட மாற்றம்- வெயிட்டிங் லிஸ்டில் இன்ஸ்பெக்டர்…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வழக்கறிஞர் சங்க தலைவராக உள்ள மோகன்தாஸ் என்பவரும், அவரது மகன் தீபன் என்பவரும் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் ரகளை செய்தவர்களை எவ்வளவோ தடுத்தும் அவர்களால் தடுக்க முடியவில்லை. மேலும் ஒரு போலீசாருக்கு அடி விழுந்தது. இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தீபனை கைது செய்தனர். இந்நிலையில் நடுரோட்டில் ரகளை செய்தவர்களை தடுக்க தவறிய எஸ்.ஐ.தினேஷ் மற்றும் காவலர்கள் வினோத்குமார், பாஸ்கர் ஆகிய மூவரும் திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மணப்பாறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.