திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் கத்தை, கத்தையாக ரூ.14 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் செல்ல விருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் மலேசிய குடியுரிமை பெற்ற அவரது 18 வயது பேத்தி ஆகியோர் கைப்பையில் கத்தை, கத்தையாக வெளிநாட்டு கரன்சிகள் அதிகளவு இருந்தன. அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அதனைத் தொடர்ந்து அந்த வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.