வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் பிப்ரவரி 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) செயல்படாது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், வள்ளலார் நினைவு தினமான பிப்ரவரி 11ம் தேதி அரசு விடுமுறை தினமாகும். மேலும் அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்களிலும், ஹோட்டல்களைச் சார்ந்த பார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இவை அனைத்தும் கட்டாயம் மூடப்பட்ட வேண்டும். அவ்வாறு மூடப்படாமல் மதுபான விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மீது மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.