பெங்களூருவில் இருந்து மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.இதுதொடர்பாக கார் டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர் திருச்சியை சேர்ந்த அப்துல் ஜாபர் என்பதும், புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வருவதாகவும், காட்டூர் பகுதியைச் சேர்ந்த நகுலன், பொன் மலையை சேர்ந்த பாலசுப்பிரமணி, திருவெறும்பூரை சேர்ந்த முகமது ரபீக், ஜாஃபர் சாதிக் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அப்துல் ஜாபர், நகுலன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கடத்திவரப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
Comments are closed.