56 -வது நினைவு தினம்: திருச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திமுகவினர் இன்று(03-02-2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன் மற்றும் வண்ணை அரங்கநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, வர்த்தகர் அணி பி.ஆர்.சிங்காரம், தொழில் அதிபர் ஜான்சன்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, வக்கீல் அந்தோணி ராஜ், டோல்கேட் சுப்பிரமணி, இன்ஜினியர் நித்தியானந்த், அயூப்கான், பி.ஆர்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.