அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை மாலை அணிவித்து மரியாதை- திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி அறிக்கை…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமு கழக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு நாளை ஒட்டி மத்திய மாவட்ட திமுக சார்பில், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கும் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நாளை(03-02-2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. நாளை காலை 7 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.