திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பிப்.4-ந்தேதி முதல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்…!
திருச்சி மின்பகிர்மான வட்டத்துக்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4-ந் தேதி முதல் அந்தந்த பகுதிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏ. செல்வி வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், திருச்சி மாவட்டம், துறையூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வருகிற 04-02-2025( செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கும், பிப்.7ம் தேதி முசிறி கோட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதேபோல பிப் 14ம் தேதி ஸ்ரீரங்கம் கோட்டம், 18-ம் தேதி திருச்சி நகரியம், 21-ம் தேதி திருச்சி கிழக்கு, 25-ம் தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், அந்தந்த பகுதியைச் சேர்ந்த மின்நுகர்வோர் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.