பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (ஜம்போரி) மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு பெருந்திரளணி விழாவை திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன.28-ந்தேதி அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிப்.3 – ந் தேதிவரை இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுளை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் பங்கேற்று தங்கள், கலச்சாரம் குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். இதன் நிறைவு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்,அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் முன்னதாக மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின்னர் சற்று நேர ஓய்வுக்கு பின்னர், விழா நடைபெறும் மணப்பாறை சிப்காட் வளாகத்திற்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் முதல்வரின் பாதுகாப்புப்படை அதிகாரிகள் நாளை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க தடை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை மறுநாள் (2-ந்தேதி) காலையில் கவர்னர் ஆர்.என்.ரவி சாரண சாரணியர் இயக்க வைர விழா பெருந்திரளணியில் பங்கேற்கிறார். கவர்னர் மற்றும் முதல்வர் வருகை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 983
Comments are closed.