ஆதவ் அர்ஜுனா சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட 17 பேருக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகள் – அறிவித்தார் த.வெ.க தலைவர் விஜய்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தவெக வில் இணையப்போவதாக கடந்த சில நாட்களாகவே பேச்சுகள் அடிபட்டன. விஜயும் ஆதவ் அர்ஜுனாவும் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் அலுவலகத்தில் சந்தித்து பேசியதாகவும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து இன்று ( ஜன.31 ) ஆதவ் அர்ஜுனா, விஜயின் பனையூர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த சூழலில் தான் இப்போது ஆதவ் தவெகவில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனாவை நியமித்து அக்கட்சித்தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவரோடு சேர்த்து 17 புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி அதிமுகவிலிருந்து தவெகவிற்கு அணி மாறிய சி.டி.ஆர் நிர்மல் குமார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணைப் பொதுச் செயலாளராகவும், பி.ஜெகதீஷ் தலைமை கழக இணை
பொருளாளராகவும், ராஜ்மோகன் கழக கொள்கை பரப்பு செயலாளராகவும், லயோலா மணி என்கிற ஏ.மணிகண்டன், பேராசிரியர் ஏ.சம்பத்குமார், ஐ. கேத்ரின் பாண்டியன் ஆகியோர் கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாகவும், எஸ். வீர, விக்னேஸ்வரன் செய்தி தொடர்பாளராகவும், எஸ்.ரமேஷ் இணை செய்தி தொடர்பாளராகவும், ஆர்.ஜெயபிரகாஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், ஏ.குருசரண், ஆர். ஜே.ரஞ்சன் குமார் ஆகியோர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆர்.திருமூர்த்தி சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், ஆர்.ராம்குமார், பி. வெங்கடேஷ், ஆர்.நரேஷ் குமார், எஸ் அறிவானந்தம் ஆகியோர் சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார் கட்சியின் முக்கிய பதவிகளான தேர்தல் பிரச்சார மேலாண்மை குழு, கழக துணைப் பொதுச் செயலாளர், கழக துணைப் பொருளாளர், கொள்கை பரப்பு செயலாளர், கொள்கை பரப்பு இணைச் செயலாளர், சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றிற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து விஜய் வெளியீட்டிற்கும் இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களிலும் தமிழக அரசியலிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Comments are closed.