திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் ஓவியம் மற்றும் வினாடி – வினா போட்டி ! பள்ளி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ம் தேதி ஈரநில நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டியை நடத்த உள்ளது. இது தொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்., பிப்ரவரி 2ம் தேதி கொண்டாடப்படும் ஈர நில நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது. வருகிற ஜனவரி 25ம் தேதி காலை 10 மணி அளவில் திருச்சி ஜோசப் கல்லூரிக்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் நேரில் வந்து ஓவியப்போட்டியில் பங்கேற்றுக் கொள்ளலாம். பள்ளி மாணவர்களை பொருத்தவரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் முதல் குழுவாகவும், 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இரண்டாவது குழுவாகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மூன்றாவது குழுவாகவும் பிரித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒரே குழுவாக இதில் பங்கேற்கலாம். தங்கள் வரையும் ஓவியங்களில் ஈர நிலை தொடர்பான வாசகங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும் வினாடி – வினா போட்டியிலும் கலந்து கொள்ளலாம். இப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில ஈர நில ஆணைய வழிகாட்டுதலின்படி பரிசுகள் வழங்கப்படும். மேலும் போட்டி தொடர்பான விவரங்களுக்கு 8667095032 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.